எத்தனை பெரும் வசதிகள் தனியார் மருத்துவம் சார்பில் வழங்கப்பட்டாலும் அரசு மருத்துவமே சேவையாற்றும் நோக்கில் இருக்க வேண்டிய கட்டாயம் இருப்பதை மீண்டும் நினைவூட்டியிருக்கிறது இந்த நிகழ்வு…

அரசு மருத்துவர்கள் அனைவரும் கொரோனா மருத்துவத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்குகிறார்கள். தனியார் மருத்துவர்களும் பார்க்க்க மாட்டேன் என்கிறார்கள். இந்த நிலையில் ஒரு பெண் நடுரோட்டில் குழந்தை பெற்றிருக்கும் அவலம் நடந்தேறியிருக்கிறது.

பஞ்சாப் மாநிலம் சண்டிகாரில் உள்ள தர்மகோட் பொது சுகாதார நிலையத்தின் அனைத்து மருத்துவர்களும் கொரோனா பணியில் ஈடுபடுத்தப்படிருக்கும் வேளை, அருகிலுள்ள ஜானேர் என்ற கிராமத்தில் வசித்து வரும் 30 வயது மதிக்கத்தக்க ஜோதி என்ற பெண்ணுக்குப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

ஆனால், தனியார் மருத்துவர்களும் கூட பிரசவம் பார்க்காமல் புறக்கணித்ததால், ஜோதியின் கணவர் இரண்டு பெண்களை அழைத்து வந்து நடுரோட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். இதற்கு இரண்டு காவலர்கள் உதவி செய்துள்ளனர்.

இதுகுறித்து இவரது கணவர் ஹர்மேஷ் தெரிவித்ததாவது, “இரவு 9 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. பொது சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றேன். அங்கு யாரும் தயாராக இல்லை என்பதைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனைகளை அணுகினோம். அங்கும் எங்களுக்கு உதவ யாரும் தயாராக இல்லை.

நாங்கள் 108க்கும் அழைத்தோம். ஆனால், பயனில்லை. அவர்கள் வேறோரு நோயாளியை அழைத்துச் சென்று கொண்டிருந்தனர்.

இரவு நேரத்தில் ஒரு பெண் வலியால் துடித்துக்கொண்டிருப்பதைக் கண்டு இரு காவலர்கள் அங்கிருந்த மரக்கட்டிலை கொண்டு வந்ததோடு இரு பெண்களையும் அழைத்து வந்தனர். அவர்களால் தான் இந்த பிரசவம் நிகழ்ந்தது” என்று தெரிவித்தார்.

நாடு முழுக்க அனைத்து அரசு மருத்துவர்களும் கொரோனா சிகிச்சையில் ஈடுபட்டுள்ள சமயம், மக்களுக்கு மற்றபடியான மருத்துவத் தேவைகளும் இருக்கும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டிய நேரம்.

எத்தனை பெரும் வசதிகள் தனியார் மருத்துவம் சார்பில் வழங்கப்பட்டாலும் அரசு மருத்துவமே சேவையாற்றும் நோக்கில் இருக்க வேண்டிய கட்டாயம் இருப்பதை மீண்டும் நினைவூட்டியிருக்கிறது இந்த நிகழ்வு.