முக்தி தரும் 7 நகரங்களில் ஒன்று திருவண்ணாமாலை மாவட்டத்தில் உள்ள அண்ணாமலையார் திருக்கோயில். அங்கிருக்கும் மலையே சிவ பெருமனாக கருதப்படுவதால், மக்கள் அனைவரும் மலையை சுற்றி கிரிவலம் வருவது வழக்கம்.

14 கி.மீ சுற்றளவு கொண்ட இந்த மலையை முழு நிலவு (பௌர்ணமி) அன்று சுற்றி வருவதே உகந்ததாக கருதப்படுகிறது. அதன் படி வரும் 7 ஆம் தேதி, அதாவது செவ்வாய் கிழமை கிரிவலம் நடைபெறுகிறது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாலும், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதாலும் மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளது. அதனால் வரும் 7 ஆம் தேதி கிரிவலம் செல்ல மக்களுக்கு தடை விதித்து அம்மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.