நிற்க கூட நேரம் இல்லாமல் காலில் சக்கரம் கட்டியது போல தொடர்ந்து இடைவெளி இல்லாமல் சினிமாவில் பிசியாக இருந்த நட்சத்திரங்கள் அனைவரையும் வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்துள்ளது கொரோனா ஊரடங்கு.

அரசு பிறப்பித்துள்ள 21 நாள் ஊரடங்கு முடிய இன்னும் ஒரு வாரம் உள்ளது. அது மீண்டும் நீடிக்கப்படுமா என்ற கேள்விக்கு தற்போது வரை அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை.

கொரோனா ஊரடங்கால் அனைவரும் வீட்டிலேயே இருப்பதால் சினிமா நட்சத்திரங்கள் தங்கள் குடும்பத்துடன் நேரம் செலவிட்டு வருகின்றனர். அது மட்டுமின்றி வீட்டை சுத்தம் செய்வது, புத்தகம் படிப்பது என தாங்கள் செய்யும் மற்ற விஷயங்களையும் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

முன்னணி நடிகரான நடிகர் அருண் விஜய் தான் வீட்டின் மொட்டை மாடியில் உடற்பயிற்சி செய்யும் விடீயோக்களை அடிக்கடி பதிவேற்றி வருகிறார். தினமும் பல மணி நேரம் ஜிம்மில் ஒர்கவுட் செய்து வந்த அவர் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே செய்யவேண்டிய கட்டாயம்.

சமீபத்தில் அருண் விஜய் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் அவரது அப்பா நடிகர் விஜயகுமார் மொட்டை மாடியில் சிலம்பம் சுற்றுவதை காட்டியுள்ளார்.