ஊரடங்கை மீறி வெளியே சுற்றி திரிந்த 10 வெளிநாட்டினருக்கு போலீசார் நூதன தண்டனை வழங்கினர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டு, மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறி வெளியே வாகனங்களில் சுற்றி திரிபவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தும் வருகின்றனர். இந்த நிலையில் ஊரடங்கை மீறி சுற்றித் திரிந்த 10 வெளிநாட்டினருக்கு போலீசார் நூதனை தண்டனை கொடுத்துள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் நகரில் உள்ள கங்கை நதிக்கரையோரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டு இருந்துள்ளனர். அப்போது வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 10 பேர் ஊரடங்கை மீறி கங்கை நதியில் குளித்துக்கொண்டு இருந்துள்ளனர். இதைப் பார்த்த போலீசார் உடனே அவர்களை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் 10 பேரிடமும் ‘நான் ஊரடங்கு விதிகளை பின்பற்றவில்லை, என்னை மன்னித்து விடுங்கள்’ என 500 முறை எழுத சொல்லி நூதனை கொடுத்துள்ளனர். இதனை அடுத்து அவர்களை அனைவரும் போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.