குருப்பெயர்ச்சியில் ஏற்படும் நன்மைகளும், தீமைகளையும் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.
புதிய வீடு மற்றும் மனை தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். தாய்வழி உறவினர்களின் மூலம் ஆதரவுகள் அதிகரிக்கும்.
மனதிற்கு நெருக்கமானவர்களிடம் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பிறக்கும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்பிற்கு ஏற்றபடி முடிவு கிடைக்கும்.
நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்துவந்த கடன் சார்ந்த பிரச்சனைகள் குறைவதற்கான சூழ்நிலைகள் அமையும்.
மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வமும், ஈடுபாடும் அதிகரிக்கும்.
கல்வி பயிலும் இடங்களில் சில மாற்றங்களை செய்து கொள்வீர்கள். போட்டிகளில் பங்கேற்று மகிழ்ச்சி அடைவீர்கள். உயர்நிலைக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும்.
மேலும், புதிய ஆராய்ச்சி தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் புதிய அனுபவமும், எதிர்பார்த்த முடிவுகளும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும், எனவே பொறுமையுடன் செயல்பட வேண்டும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிருப்தியை ஏற்படுத்தும்.
புதிய வேலை சார்ந்த முயற்சிகளை மேற்கொள்பவர்களுக்கு எதிர்பார்த்த சுபச்செய்திகள் கிடைக்கும்.
பணி நிமிர்த்தமான சிறு தூர பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். பொறுமையுடன் செயல்பட்டால் காரியத்தை நிறைவேற்றி கொள்ள இயலும்.
ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
விவசாய பணிகளில் இருந்துவந்த தொய்வு நிலை நீங்கி புத்துணர்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். உறவினர்களிடத்தில் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் அகலும்.
கலை சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். எழுத்துத்துறையில் இருப்பவர்களுக்கு பொருளாதார உயர்விற்கான வாய்ப்புகள் உருவாகும்.
நண்பர்களின் மூலம் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். உயர் பதவியில் இருப்பவர்களின் ஆதரவுகள் கிடைக்கும்.
வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகள் குறையும்.
அரசு தொடர்பான உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். வேலையாட்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும்.