BIG BOSS-ஐ ஓரம்கட்டிய இயக்குனர் ஷங்கர்.

இந்தியன் 2 படம் தாமதமாகி வருவதால், அடுத்த படத்தை துவங்க திட்டமிட்டுள்ளார் இயக்குனர் ஷங்கர். அதன்படி ஒரே படத்தில் 4 மொழி பட ஹீரோக்களை இயக்க அவர் முடிவு செய்துள்ளாராம். இதற்கான கதை எழுதும் பணியை அவர் முடித்துவிட்டார் என கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, கேஜிஎப் படத்தில் நடித்த கன்னட நடிகர் யஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். அதேபோல், தெலுங்கில் இருந்து ஒரே ஹீரோவும் மலையாளத்தில் இருந்து ஒரு ஹீரோவும் இதில் நடிக்க இருக்கிறார்களாம்.

ஒரே சமயத்தில் 4 மொழி படமாக இந்த படத்தை உருவாக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளாராம். கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படத்தை ஷங்கர் இயக்கி வந்தார். இந்த படத்துக்கான படப்பிடிப்பு தாமதமாகும் என கூறப்படுகிறது. அதனாலேயே அடுத்த பட வேலைகளை துவங்க ஷங்கர் தயார் ஆகி வருகிறார்.

Tamil Girls Chat Room