மாஸ்டர் படத்தை கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் செய்ய திட்டமிட்டார்கள். ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்படவே ரிலீஸ் தள்ளிப் போனது.

Tamil Girls Chat Room

மாஸ்டர் படத்தை அடுத்து விஜய்யை ஏ.ஆர். முருகதாஸ் இயக்குவார் என்று கூறப்பட்டது. தற்போதைக்கு தளபதி 65 என்று அழைக்கப்படும் அந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் என்றார்கள். இந்நிலையில் தளபதி 65 படத்தில் இருந்து முருகதாஸ் விலகிவிட்டார்.

இதையடுத்து நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார் தான் தளபதி 65 படத்தை இயக்கப் போவதாக தகவல் வெளியாகி தீயாக பரவியுள்ளது. நெல்சன், விஜய் கூட்டணி சேரும் படத்திற்கு தமன் இசையமைக்கிறாராம்.
இந்நிலையில் நெல்சன் விஜய்க்காக என்ன கதை வைத்திருக்கிறார் என்று பேச்சு கிளம்பியுள்ளது. நெல்சன் திலீப் குமார் சிம்புவை வைத்து வேட்டை மன்னன் படத்தை எடுத்தார். ஆனால் அந்த படம் கைவிடப்பட்டது. தற்போது வேட்டை மன்னன் கதையை தான் விஜய்யை வைத்து இயக்கப் போவதாக கூறப்படுகிறது.

வேட்டை மன்னனாக தளபதி மேர்சல்லாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.