கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்ட பள்ளிகளை திறப்பது குறித்து அக்டோபர் 15ஆம் தேதிக்கு மேல் மாநிலங்கள் முடிவெடுக்கலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. பள்ளிகள் திறப்பிற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றன.

தமிழகத்தை பொறுத்தவரை அக்டோபர் 1ஆம் தேதி முதல் 9 – 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்குச் சென்று சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த அறிவிப்பு பின்னர் திரும்பப் பெறப்பட்டது.

Tamil Girls Chat Room

இந்த நிலையில், ஈரோடு கோபிச்செட்டிப்பாளையம் அருகே கொளப்பலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு மக்கள் நலத் திட்டப்பணிகளை வழங்கினார். அப்போது தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்றும் அது தொடர்பாக எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை என்றும் அமைச்சர் பதிலளித்தார்.