நான் அப்பாவை போன்று திரைத்துறையில் வேலை செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை. ஜவுளித் தொழிற்சாலையில் எனக்கு வேலை கிடைத்தது. தினமும் 18 மணிநேரம் வேலை. என் முதல் சம்பளம் ரூ. 736. வெள்ளை நிற கவரில் வைத்து சம்பளம் கொடுப்பார்கள். அந்த கவரின் எடையை நான் இன்னும் மறக்கவில்லை. சூரரைப் போற்று படத்தில் நடித்தபோது நான் ஜவுளித் தொழிற்சாலையில் வேலை பார்த்த நாட்களை நினைத்துப் பார்த்தேன் என்று நடிகர் சூர்யா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
சூரரைப் போற்று படத்தில் சூர்யா ஏர் டெக்கன் நிறுவனர் கோபிநாத்தாக நடித்துள்ளார். கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னுக்கு வந்த கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்தபோது நடிகர் சூர்யாவிற்கு தனது கடந்த கால நினைவுகள் எட்டிப்பார்துள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படம் வரும் 12ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவிருக்கிறது.