லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன் நடிக்க உள்ள ‘விக்ரம்’ படத்தின் டைட்டில் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. வெளியான கொஞ்ச நேரத்திலேயே இந்த டீசர் ஒரு காப்பி என சமூக வலைத்தளங்களில் சர்ச்சை வெளியானது. நெட்பிளிக்ஸ் தளத்தில் உள்ள ‘நார்கோஸ் மெக்சிகோ’ வெப் தொடர் சீசன் 2 டீசரைக் கொஞ்சம் மாற்றி ‘விக்ரம்’ பட டைட்டில் டீசராக வெளியிட்டுவிட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ‘நார்கோஸ் மெக்சிகோ சீசன் 2’ டீசரின் அரங்க அமைப்பு, நீளமான உணவருந்தும் மேஜை, அடியில் ஆயுதங்கள், லைட்டிங் என அனைத்தும் ‘விக்ரம்’ டீசரில் அப்படியே இடம் பெற்றுள்ளது. இந்த வருட ஜனவரி மாதம்தான் இந்த டீசர் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஹாலிவுட் படங்களைக் காப்பியடித்து அப்படியே தமிழில் கொடுப்பவர் என்ற குற்றச்சாட்டு கமல்ஹாசன் மீதும் பல வருடங்களாகவே உள்ளது. இப்போது அவருடன் இணைந்துள்ள லோகேஷும் இப்படி ஒரு காப்பி டீசருடன் வருவதில் ஆச்சரியமில்லை தான்.ஏற்கெனவே, தான் இயக்கிய ‘கைதி’ படத்தில் காப்பி குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டவர் தான் லோகேஷ். ‘மாஸ்டர்’ படத்தைக் கூட அவர் எங்கிருந்தோ சுட்டிருக்கலாம் என்றே சொல்லி வருகிறார்கள். அதற்கு ‘மாஸ்டர்’ போஸ்டர்களையும் உதாரணமாகச் சொன்னார்கள்.

Tamil Girls Chat Room