நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என அண்மைக்காலமாகவே பேசப்பட்டு வருகிறது.

Tamil Girls Chat Room

இந்த நிலையில் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார் அவரின் தந்தை எஸ்.ஏ.சி.

கட்சி தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளர் எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளர் ஷோபா என விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து தன் தந்தை தொடங்கியுள்ள கட்சிக்கும் தனக்கும் தொடா்பும் இல்லை என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

மேலும் விஜய்யின் அம்மா ஷோபாவும் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இது தொடர்பான அனைத்து செய்திகளையும் நம் தளத்தில் உடனுக்குடன் பார்த்தோம்.

இந்நிலையில் இவர்களின் அரசியல் கட்சியை குடும்ப நாடகம் என விமர்சித்துள்ளார் நடிகையும் மாடலுமான மீரா மிதுன்.

அவரின் இன்றைய ட்விட்டர் பதிவில்…

“எஸ்.ஏ.சி குடும்ப அரசியல் நாடகம் போடுகிறார். உங்களுக்கு தைரியம் இல்லை என்றால் ஏன் அரசியல் ஆசை?” என சீண்டும் வகையில் கேட்டுள்ளார்