தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவரை பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டவர் இவர் மனைவி சங்கீதா.
லண்டனில் இவரது குடும்பம் தற்போது வசித்து வந்தாலும் இவர்களது பூர்வீகம் இலங்கைதான். ஈழத்தமிழர்கள் பிரச்சினை காரணமாக இவர்களது குடும்பம் இலங்கையை விட்டு வெளியேறி லண்டனுக்கு இடம் பெயர்ந்தது.
இதனைத்தொடர்ந்து விஜய், தனது மனைவி சங்கீதாவின் உறவினர் மூலமாக இலங்கையில் கொழும்பு என்ற ஊரில் சில சொத்துக்களை வாங்கியுள்ளார்.
அந்த சொத்துக்களை தற்போது சிங்கள முதலாளிகள் சிலர் கைப்பற்ற முயல்வதாக பிரச்சனை எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது தளபதியின் விஜயின் மாஸ்டர் படம் ரிலீசுக்கு ரெடியாக இருக்கும் நிலையில் இந்த சொத்து பிரச்னையை விஜய் எப்படி எதிர்கொள்ள போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.