நடிகர் சங்கத்தில் பாண்டவர் அணி செயலாளராக இருந்த விஷால் அவரது கனவான நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்த பிறகே திருமணம் செய்து கொள்வேன் என கூறியிருந்தார், அதுமட்டும் இல்லாமல், உடன் இருந்த ஆர்யாவும் அப்படியே செய்வார் என அவரை கோர்த்துவிட்டு அவரை செஞ்சார். இதில் வேடிக்கையான விஷயம் என்ன என்றால், அந்த கட்டிடத்தில் இருக்கும் கல்யாண மண்டபத்தில் தான் கல்யாணம் என்றும் வாக்களித்தார்.

அதன் பின்னர் விஷாலுக்கும் தொழிலதிபர் ஒருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. விரைவில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் நிறுத்தப்பட்டது. இதற்கு பல காரணம் சொன்னாலும், எந்த காரணம் என்று தெளிவாக சொல்ல முடியவில்லை.

Tamil Girls Chat Room

இந்த நிலையில் தற்போது இந்த தொழிலதிபரின் மகளுக்கு வேறொரு நபருடன் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போ விஷாலோட வாழ்கை ? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.