மாஸ்டர் படத்தை 1000 தியேட்டர்களில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரும் பொங்கல் தினத்தன்று மாஸ்டர் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில் ஒடிடி தளத்தில் வெளியிட பேச்சு வார்த்தை நடப்பதாகவும் இன்னொரு தகவல் வெளியாகியது.

Tamil Girls Chat Room

இருப்பினும் படத்தை தியேட்டரில்தான் வெளியிட வேண்டுமென்று நடிகர் விஜய் கண்டிப்புடன் தெரிவித்ததால், மாஸ்டர் படம் தியேட்டரில் தான் வெளியாகுமென படத்தின் தயாரிப்பாளர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வரும் பொங்கலன்று இப்படத்தை பிரம்மாண்டமாக 1000 தியேட்டர்களில் வெளியிட முடிவெடுத்து, அதற்காக விநியோகர்கள் மற்றும் தியேட்டர் ஒனர்களிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து மாஸ்டர் படம் 1000 தியேட்டர்களில் வெளியானால் பொங்கலுக்கு மற்ற நடிகர்களின் படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்படுமென ஊடக செய்திகள் தெரிவிக்கின்றனர்.