மணிரத்னம் இயக்கிய பாம்பே படத்தில் ஹம்மா ஹம்மா என்கிற ஒற்றை பாடலில் ஆடியதன் மூலம் தமிழ் பசங்களுக்கு அறிமுகமானவர் சோனாலி பிந்த்ரே. பிறகு ‘காதலர் தினம்’ படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இன்னமும் ரசிகர்களுக்கு ரோஜா என்றால் நடிகை ரோஜா, மணிரத்னத்தின் ரோஜாவிற்கு பிறகு நம்ம சோனாலிதான் நினைவிற்கு வரும். இன்று வரை ‘காதலர் தினம்’ பாடல்கள் ரசிகர்களிடையே மிகப் பிரபலம்.

Tamil Girls Chat Room

இவர் ஏராளமான ஹிந்தி படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார். பின், பிரபு சாலமன் இயக்கத்தில் அர்ஜூனுடன் ‘கண்ணோடு காண்பதெல்லாம்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். கடந்த 2018 ஆம் வருடம் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டார்.

வெறும் 30 சதவீதம் மட்டுமே பிழைக்க வாய்ப்பிருப்பதாக அப்போது மருத்துவர்கள் கூறியதாக அவர் தெரிவித்திருந்தார்.

ஆனாலும் தன் தன்னம்பிக்கை காரணமாக கேன்சர் பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டு வந்துள்ளார். இதுகுறித்து அவர் அவ்வப்போது Motivation பதிவுகளை எழுதி வருகிறார்.

இந்நிலையில், என்னுடைய ஹேர் ஸ்டைல் எப்படி இருக்கிறதோ.. அதை பொருத்து தான் என்னுடைய மூடு இருக்கும்.. என்று வாசகம் பதிந்த டீ சர்ட்டை அணிந்த படி போஸ் கொடுத்துள்ளார்.