கொரோனா வைரஸ் தொற்றுக்கு 589 புதிய தினசரி மரணங்களை ரஷ்யா பதிவு செய்துள்ள நிலையில், அடுத்த வாரம் கொரோனாவுக்கு எதிராக வெகுஜன தன்னார்வ தடுப்பூசிகளை தொடங்குமாறு ஜனாதிபதி விளாடிமிர் புடின் இன்று ரஷ்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அடுத்த சில நாட்களுக்குள் ரஷ்யா 2 மில்லியன் தடுப்பூசி அளவை உற்பத்தி செய்யும் என்று புடின் கூறினார். கடந்த மாதம் ரஷ்யா தனது ஸ்பூட்னிக் வி தடுப்பூசியின் இடைக்கால சோதனை முடிவுகளின்படி கொரோனாவிலிருந்து மக்களைப் பாதுகாப்பதில் 92% பயனுள்ளதாக இருந்தது என்று கூறியது.

Tamil Girls Chat Room

பெரிய அளவிலான தடுப்பூசி டிசம்பர் மாதத்தில் தன்னார்வ அடிப்படையில் தொடங்கப்படலாம் என்று முன்னர் ரஷ்யாவின் துணை பிரதமர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தடுப்பூசி போடுவதில் ரஷ்யர்களுக்கு முதலிடம் என்பதில் உறுதியாக இருப்பதாக ரஷ்ய அரசு முன்னதாக உறுதி அளித்தது. அதே சமயம் ரஷ்யா மற்ற நாடுகளுடன் விநியோக ஒப்பந்தங்களைப் பற்றியும் விவாதித்து வருகிறது.

இதற்கிடையே கொரோனாவின் இரண்டாவது அலை தற்போது ரஷ்யாவில் தொடங்கியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்த ரஷ்யா தயக்கம் காட்டி வருகிறது.

எனினும் டிசம்பர் 30 முதல் ஜனவரி 10 வரை ரஷ்யாவின் புத்தாண்டு விடுமுறை நாட்களில் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் நகரத்தில் அருங்காட்சியகங்கள், தியேட்டர்கள் மற்றும் கச்சேரி அரங்குகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.