தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய், இவரது நடிப்பில் இறுதியாக பிகில் திரைப்படம் வெளியானது. தற்போது பொங்கலுக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படம் வெளியாக இருக்கிறது.

இதனை அடுத்து முருகதாஸ் விஜய் படத்தை இயக்குவார், சுதா கொங்கரா விஜய் படத்தை இயக்குவார், வெற்றிமாறன் விஜய் படத்தை இயக்குவார், அருண் காமராஜ் விஜய் படத்தை இயக்குவார் என பல பெயர்கள் அடிபட்டு வந்தாலும் விஜய் டிக் செய்த டைரக்டர் கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய வளர்ந்து வரும் நெல்சன் அவர்கள்தான்.

Tamil Girls Chat Room

இந்த நிலையில் இன்று பகல் சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் வலைதளத்தில் அவர்கள் தயாரிப்பில் இருக்கும் நான்கு படங்களை பற்றி அப்டேட்களை அள்ளி வீசுவார்கள் என்று அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தார்கள். தற்போது முதல் அப்டேட் ஆக நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 65 படத்தின் அறிவிப்பு வந்திருக்கிறது.

வழக்கம்போல் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் மேலும் காமெடி படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் யார் யார் நடிக்கப் போகிறார்கள் என்கிற தகவல் தயாரிப்புக் குழு விரைவில் அறிவிப்பார்கள் என நம்பப்படுகிறது.