சில மாதங்களுக்கு முன்னர் தொழில் அதிபர் ஹேம்நாத் அவர்களுடன் நிச்சயதார்த்தம் கூட முடிந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில், மன அழுத்தம் தாங்காமல் பிரபல பைவ் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹீரோயின் VJ சித்ரா.

இவருடைய திடீர் தற்கொலை முடிவு சம்பவம் சின்னத்திரையில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஆனால் நேற்று முதல் இது கொலையா ? தற்கொலையா என்கிற லெவலுக்கு போலீஸார் விசாரணை தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tamil Girls Chat Room

சித்ரா இறந்த பிறகு அவரின் ரசிகர்களும், மற்ற நடிகர் நடிகைகளின் ரசிகர்களும் சித்ரா பேசிய பல வீடியோக்களை ஸ்டேடஸ் ஆக பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகை சித்ரா தளபதி விஜய் குறித்து பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத் தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

அதில், ” என் திருமணத்திற்கு நான் தளபதி விஜய்யை விருந்தினராக அழைப்பேன். அதனாலதான் அவரை இன்று வரை பார்க்காமல் இருக்கிறேன். ஒவ்வொருவருக்கும் வயது ஆக ஆக வயாசகி கொண்டே இருக்கும், ஆனால் விஜய்க்கு இளமை கூடி கொண்டே போகிறது ” என்று கூறியுள்ளார். கடைசி வரை அவரின் ஆசை நிறைவேறாமல் போனதுதான் வேதனை.