தற்போதைக்கு தமிழக தாய்மார்கள் மத்தியில் பிரபலமான சீரியல் என்றால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். நல்ல குடும்ப கதை அம்சத்துடன் இருப்பது பலருக்கும் இது பேவரைட்டாக அமைந்துள்ளது.

மேலும் இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றவர் தான் சித்ரா. இவர் ஏற்கனவே சன் டிவி போன்ற முன்னணி தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்திருந்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான் இவரை செலிபிரிட்டி ரேஞ்சுக்கு மாற்றியது.

Tamil Girls Chat Room

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வரும் ஜோடிகளில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது கதிர் மற்றும் முல்லை ஜோடி தான். அதாவது கதிராக குமரன் என்ற நடிகரும், முல்லையாக சித்ராவும் நடித்து வந்தனர். இவர்களுக்காகவே சமீபகாலமாக பல இளம் தலைமுறையினரும் இந்த சீரியலை பார்த்து வந்தனர்.

மேலும் கடந்த சில எபிசோடுகளில் இருவருக்குமான ரொமான்ஸ் காட்சிகள் அதிகமாகவே காணப்பட்டது. சினிமாக்களில் முத்தக்காட்சியில் நடிப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால் சீரியல்களில் நடிகைகள் அந்த மாதிரி முத்தக் காட்சிகளில் நடித்து விட்டால் அதை ஊதிப் பெரிதாக்கி விடுவார்கள்.

அப்படித்தான் குமரன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ராவுக்கு முத்தம் கொடுத்த காட்சி பெரும் வரவேற்பை பெற்றது. அதேசமயம் சித்ராவுக்கும் அவரது கணவருக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டதற்கு இதுதான் காரணம் என பிரபல முன்னணி செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

முதலில் தற்கொலை என்று கூறப்பட்ட சித்ரா வழக்கில் தற்போது கொலை என கேஸ் திரும்பி இருக்கும் நிலையில் இந்த முத்தக்காட்சி பிரச்சனையை தான் சண்டைக்கு முக்கியமாக காரணமாக இருந்திருக்கும் என கூறுகின்றனர். தற்போது சின்ன விஷயம் கிடைத்துள்ளதால் இதிலிருந்து காவல்துறையினர் துருவித்துருவி விசாரணை நடத்த உள்ளார்களாம்.