“யார்பா இந்த பொண்ணு மூக்கு சப்பையா இருக்கு! இந்த பொண்ணு நம்ம படத்துக்கு செட் ஆகாது ” என்பதில் தொடங்கி ” சார் த்ரிஷா இந்த character பண்ணலைனா இந்த படம் தேறாது ” என்று சொல்லவைத்தது தான் திரிஷாவின் வெற்றி.

” ஜோடி ” என்கிற தமிழ் படத்தில் கதாநாயகி சிம்ரனின் தோழியாக முதன் முதலில் தனது நடிகை அவதாரத்தை தொடங்கினார். அதன் அமீர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த ” மௌனம் பேசியதேய ” படத்தின் கண்களை அவர் பக்கம் திருப்பினார். ” யாரோ புது பொண்ணாம் பா ! நடிக்கவே வரல ! ஆனா பாக்க நல்லாருக்கு ” என்பதாய் அவரை பார்த்த ரசிகர்களின் முதல் விமர்சனமாக வந்தது.

Tamil Girls Chat Room

“பூப்பறிக்க நீயும் போகாதே பூக்களுக்குள் கத்தி சண்டையடி ” இந்த பாட்டை பார்த்ததிலிருந்து த்ரிஷா மீது கிட்ட தட்ட ரசிகர்கள் மயங்கி போய் தான் கிடந்தார்கள். ஜெயம் ரவியோடு இவர் அடித்த ஜில்லான லூட்டி தான் உனக்கும் எனக்கும். கவிதாவாக வரும் த்ரிஷா அச்சு அசல் ஒரு அப்பாவி கிராமத்து பெண்ணாகவே வாழ்ந்திருப்பார். பாட்டும் ஹிட்டு , படமும் செம ஹிட்டு.

விண்ணைத்தாண்டி வருவாயாவில் வரும் ஜெஸ்ஸிதான் அகில உலகம் முதல் பட்டிதொட்டி வரை த்ரிஷாவுக்கு ரசிகர் பட்டாளம் கூடிய படம். ஓமன பெண்ணேவாக எல்லா இளைஞர்கள் மனத்திலும் குடி புகுந்தார். இன்னும் அந்த இதய கூட்டினுள்ளிருந்து த்ரிஷா வெளிவரவில்லை. அப்படி பேர் வாங்கி கொடுத்த படம். வித்யாசமான கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்திருப்பார். ” சார் த்ரிஷா இந்த character பண்ணலைனா இந்த படம் தேறாது ” என்கிற நொடி இங்க இருந்துதான் ஆரம்பம்.

தலயோடு 4 படங்கள் நடித்திருந்தாலும் இந்த ‘ ஹேமானிகா ‘ கதாபாத்திரம் அளவுக்கு எதுவும் அவருக்கு அமையவில்லை. சில மணி நேரங்களில் வந்தாலும் அஜித் மற்றும் த்ரிஷா ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடித்த கதாபாத்திரம். மழை வர போகுதே பாட்டில் இவருக்கும் அஜித்துக்கும் இருக்கும் chemistry “அமர்க்களம்”

திடீரென்று அப்டி ஒரு craze வந்தது “96” படத்தின் மூலம். எஸ். ஜானகி அம்மாவே இந்த படத்தில் இவரது நடிப்பை பாராட்டி இருக்காங்க பாஸ் ! அதுவும் அந்த “காதலே காதலே” பாட்டு யப்பா இன்னிக்கு மட்டும் இல்ல எப்பவும் ரிங்க்டோன் தான்

தற்போது இவர் நடித்துக்கொண்டிருக்கிற படங்கள் என்ன என்றால் ராங்கி, பரமபதம் விளையாட்டு, Sugar, பொன்னியின் செல்வன், தெலுகு படம் ஆகும். இவர் சினிமாவிற்கு வந்து 18 ஆண்டுகள் ஆகிவிட்டதை தொடர்ந்து #18YearsOfTrishaism மற்றும் #18yearsofSouthQueenTrisha என்ற டேக்குகளை ட்ரெண்ட் செய்து அவரது புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து கூறி வருகிறார்கள்.