சின்னத்திரை நடிகையான சித்ரா தற்கொலை செய்துகொண்டது ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை தான் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்’ அவர் வெள்ளித்திரையில் நடித்த முதல் படமான கால்ஸ் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் சித்ரா. இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் அவர் நடித்திருக்க மாட்டார் வாழ்ந்திருப்பார் என்றே சொல்லலாம். முல்லை கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து வந்தனர்.

Tamil Girls Chat Room

மேலும் முல்லைக்காக தான் இந்த சீரியலே என்று கூட சொல்லலாம். எப்பொழுதுமே சிரித்த முகத்துடனேயே இருக்கும் சித்ராவிற்கு தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு என்ன தான் நடந்திருக்கும் என அவரது ரசிகர்கள் பரிதவித்து வருகின்றனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் ஹேமந்த்தும் அவரது தாயாரும் கொடுத்து வந்த டார்ச்சர் தான் அவர் மனஉளைச்சலுக்கு காரணம் என கூறியுள்ளனர்.

சித்ரா அந்த சீரியலில் கதிருடன் நெருக்கமாக நடித்திருப்பது பிடிக்கவில்லை என்றும் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் ஹேமந்த். சித்ராவிற்கு வெள்ளித்திரையில் நடிக்க வேண்டும் என்று ஆசை ஆரம்பத்தில் இருந்தே இருந்துள்ளது. மேலும் ‘கால்ஸ்’ படத்திலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரில் கெத்தாக காட்சியளிக்கும் சித்ராவை பார்த்து பலரும் கண்ணீர் விட்டு வருகின்றனர். முதல் படமும் இது தான் கடைசி படமும் இது தான் என புலம்பி வருகின்றனர். இந்த படத்தை சபரீஷ் இயக்குகிறார். இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் வைரலாகி வருகிறது. இந்த படத்தை எஸ்.ஜெயகுமார், காவேரி செல்வி தயாரித்துள்ளனர்.