சித்ரா மரணமடைந்த இடத்துக்கு அருகில் இருக்கும் பிக்பாஸ் செட்டில் இருக்கும் கமெராவை பொலிசார் ஆய்வு செய்துள்ள நிலையில் விசாரணை வேறு பக்கம் திரும்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.

தொகுப்பாளினியும், நடிகையுமான சித்ரா நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஹொட்டலில் தங்கியிருந்து தொடரில் நடித்து வந்தார்.

Tamil Girls Chat Room

இந்தநிலையில் கணவர் ஹேம்நாத்துடன் ஹொட்டல் அறையில் தங்கியிருந்த போது, சித்ரா சில தினங்களுக்கு முன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இதனிடையே சித்ராவின் தற்கொலை குறித்து காவல்துறையினர் மற்றும் மாவட்ட வட்டாட்சியர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சித்ரா மர்ம மரணம் தொடர்பாக பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவரது கணவர், சித்ராவின் அம்மா மேலும் அவர் பணியாற்றிய தொலைக்காட்சியில் உள்ள சிலரிடம் விசாரணை செய்ததில் சில முக்கிய தகவல் வெளியானதாக கூறப்படுகிறது.

அதன்படி, அவர் மர்ம மரணம் அடைந்த அன்று இரவு ஒரு ஆம்புலன்ஸ் அவர் தங்கிருந்த ஹொட்டலுக்கு வந்து சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் சித்ரா வேறு எங்கேனும் மரணமடைந்தாரா இல்லை, அவர் இறந்ததற்கு பிறகு மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டு மீண்டும் அறைக்கு அழைத்து வரப்பட்டாரா என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்த சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் இருக்கும் பிக்பாஸ் செட்டில் இருக்கும் கமெராவில் காவல்துறையினர் விடியவிடிய ஆய்வு செய்து இந்த மர்ம மரணம் தொடர்பாக பல முக்கிய காட்சிகளை தகவல்களாக எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.