விழுப்புரம் : மனைவியுடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட ரவுடியை கணவன் கொலை செய்து முக்கிய உறுப்பை அறுத்தெறிந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் வடக்கு ரெயில்வே காலனி பகுதியை சேர்ந்தவர் விஜி என்கிற தொப்பை விஜி (வயது 36). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, மற்றும் கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி, நாட்டு வெடிகுண்டு வீசுதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

Tamil Girls Chat Room

இந்நிலையில் நேற்று இரவு கீழ்பெரும்பாக்கம் சண்முக பெருமாள் கோவில் தெருவில் வசித்து வரும் தனது சித்தப்பாவான சிலம்பரசன் என்பவர் விஜி வீட்டிற்கு குடிபோதையில் சென்று அவரை தகாத வார்த்தையால் திட்டி தகராறு செய்துள்ளார்.

மேலும் சிலம்பரசன் தான் வைத்திருந்த கத்தியால் வெட்டினார், இதில் கழுத்து, வயிறு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டினார். மேலும் ஆண் உறுப்பை அறுத்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் விஜி மயங்கி விழுந்தார். இந்த சம்பவத்தை கேள்விப்பட்டதும் அங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.பின்னர், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த விஜியை மீட்டு உடனே சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக சிலம்பரசனை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சிலம்பரசன் மனைவியிடம் விஜி வைத்திருந்த தகாத உறவினால் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரை வெட்டிக்கொலை செய்திருப்பது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரத்தில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.