சின்னத்திரையில் இருந்து மக்கள் மனதில் இடம் பிடிப்பது அவ்வளவு எளிது கிடையாது. ஆனாலும் நாடக நடிகர்கள் தாண்டி, புகழ் பெற்றவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படிப்பட்டவர்களில் அஞ்சனா ரங்கனும் ஒருவர்.

சன் மியூசிக்-கில் VJ என சொல்லப்படும் தொகுப்பாளாராக இருந்த இவர், தனது நிகழ்ச்சிகளின் மூலம் மக்களிடம் அறிமுகமானார். இவருக்கென்று ரசிகர்கள் வளர தொடங்கி, நிகழ்ச்சியில் நிறைய கால் செய்து ஹிட்டாக்கினார்கள்.

Tamil Girls Chat Room

கயல் படத்தில் கதாநாயகனாக நடித்த சந்திரனை கல்யாணம் முடித்த இவர், அதோடு வேலைகளுக்கு முழுக்குப் போட்டு தன் சொந்த வேலைகளை பார்க்க ஆரம்பித்தார்.

ஆனாலும் டிக்டாக் மூலம் வீடியோ பதிவு செய்து தனது ரசிகர்களுக்காக பகிர ஆரம்பித்தார். டிக்டாக்-கும் தடை செய்யப்படவே, அங்கிருந்து இன்ஸ்டாகிராமிற்கு தாவி விட்டார்.

சமீபத்தில் அவர் வெளியிட்ட ஒரு வீடியோவை அவரது ரசிகர்கள் விடுவதாய் இல்லை. ‘மேக்கப் இல்லாமல் இருந்தாலும் அவங்க எனக்கு புஜ்ஜி தான்” என ரசித்துக்கொண்டு அதை கேலரியிலும் சேமித்துகொள்கிறார்கள். புஜ்ஜி பாடலுக்கு ரியாக்சன் செய்யும் அந்த வீடியோவை பார்த்து அஞ்சுவை கொஞ்சிக்கொண்டு இருக்கிறார்கள் அவரது அபிமானிகள்.