சில நாட்களுக்கு முன் சின்னத்திரை ஹீரோயின் சித்து VJ தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் உறைந்து போக செய்தது. சோசியல் மீடியாவில் அவ்வளவு ஆக்டிவாக இருக்கும் இவரா இறந்தார் ? என்று அதிர்ச்சியில் இருந்தார்கள் ரசிகர்கள்.
இவரின் இறப்பு பற்றி அன்றாடம் சில திடுக்கிடும் செய்திகள் வருகின்றன. இது எல்லாம், இன்று வரை அவரது இறப்பை தாங்க முடியாத சித்ராவின் ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியாக தான் உள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஆகட்டும், நிஜ வாழ்க்கை ஆகட்டும், சித்ராவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது, ஆனால் சித்ராவை போல ஒரு இன்ஸ்டாகிராம் பிரபலம் அவரை போல உடை அணிந்து, போஸ் கொடுத்து, முக பாவனைகளை அப்படியே சித்ராவை போல புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளார். “ஒரு வேலை இந்த கீர்த்தனாதான் அடுத்த முல்லையா ?” என்று கேட்கிறார்கள்.
அப்படியே நம்ம சித்ராதான் என்று ஆணிதனமாக கூற முடியவில்லை என்றாலும் டக்குன்னு பார்த்த ஒரு இனம் புரியாத இன்பம் ஏற்பட்டு அந்த புகைப்படங்களை வியந்து பார்க்கின்றனர்.
