ஒரு வாரத்திற்கு முன், பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரசிகர்களும் பல்வேறு பிரபலங்களும் சித்ராவின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து போலீசார் அவரது காதல் கணவர் ஆன ஹேம்நாத்தை கைது செய்துள்ளனர். இந்நிலையில் நடிகை சித்ராவின் தோழி ஒருவர் ஒரு பெரிய குண்டை போட்டு இருந்தார். அதில், சித்ராவும் விஜய் டிவி தொகுப்பாளர் நடிகருமான ரக்‌ஷனுடன் டேட்டிங் சென்றதாகவும் அப்போது ரக்‌ஷன் சித்ரா உடன் இருக்கும் நெருக்கமான வீடியோவை எடுத்து சித்ராவை மிரட்டியதாகவும் கூறி இருந்தார். இதனால் மொத்த இண்டஸ்ட்ரியும் இந்த விஷயம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Tamil Girls Chat Room

இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள ரக்‌ஷன், “நானும் சித்ராவும் டேட்டிங் சென்றதாகவும் அவரை நான் வீடியோ எடுத்து மிரட்டியதாக வந்த செய்தி பொய்யானது. நானே கம்மி சம்பளம் வாங்கும் ஒரு கூலி தொழிலாளியாக வாழ்க்கை நடத்தி வருகிறேன். எனக்கு சித்ரா ஒரு நல்ல தோழி. இவ்வளவு செஞ்சவன் யாராவது சாவுக்கு வருவானா? நான் சித்ராவின் மரணத்திற்கு கூட சென்று இருந்தேன். அங்கே கூட எல்லாரும் ஹேமந்த்தை குறை சொல்லி எல்லோரும் பேசிக்கொண்டு இருந்தோம் என்று கூறியுள்ளார்.