தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். சமீபத்தில் அவருக்கு கௌதம் கிச்சலு என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்குப் பிறகும் அவர் நடிப்பில் கவனம் செலுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார். தற்போது அவரது கைவசம் தமிழில் இந்தியன் 2 படமும், தெலுங்கில் ஆச்சார்யா என்ற படமும் உள்ளது.

Tamil Girls Chat Room

சமீபத்தில் ஆச்சார்யா படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட காஜல் அகர்வால், அப்படத்தில் முழுவீச்சில் நடித்து வருகிறார்.தமிழ் சினிமாவில் பழனி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால்.

அதனை தொடர்ந்து அவர் மாவீரன் படத்தின் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானார். மேலும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவானது.

இதனை தொடர்ந்து நடிகை காஜல் அகர்வால் சரோஜா, பொம்மலாட்டம், மோதி விளையாடு, ஜில்லா, மாரி, விவேகம் மெர்சல் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இந்த நிலையில், தனது கணவருடன் இணைந்து வீட்டிற்கு உள் அலங்காரம் செய்யக்கூடிய இண்டீரியர் டெக்கரேட் தொழிலைத் தொடங்கியுள்ளார். இதற்கான விளம்பரப்படத்தில் கௌதம் கிச்சலு மற்றும் காஜல் தம்பதி இணைந்து நடித்துள்ளனர்.

இந்நிறுவனம், வீட்டிற்கான அலங்காரம் செய்து கொடுப்பது மட்டுமின்றி வீட்டிற்குத் தேவையான அலங்காரப் பொருட்கள் விற்பனையிலும் ஈடுபடுகிறது.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேலாடை எதுவும் அணியாமல் நீருக்குள் படுத்தபடி டாப் ஆங்கிளில் போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.