நடிகை மீனா அவர்கள், தெலுங்கு, மலையாளம், தமிழ் என 90’s – இல் ரவுண்டு காட்டி அடித்தார். இவர் ரஜினி, கமல், அஜித் போன்ற பல டாப் நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். ஆனால் விஜய்யுடன் ஷாஜகான் படத்தில் இடம்பெறும் ஒரு குத்து பாடலில் நடனமாடி உள்ளார்.

தற்போது, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய சூப்பர்ஹிட் முத்துவுக்கு பிறகு 24 ஆண்டுகளுக்குப் பின் நடிகை மீனா ரஜினிகாந்த் உடன் ஜோடி சேருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது, அதன் பின் ஒரு பாரம்பரியமான, கிராமத்து தோற்றத்தில் இருக்கும் மீனாவுடன் செட்களில் இருந்து புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியது.

Tamil Girls Chat Room

மீனாவின் அழகிய தோற்றம் ரஜினிகாந்த் ரசிகர்களை எஜமான் நாட்களுக்கு அழைத்துச் சென்றது, அங்கு அந்த படத்தில்தான் முதல்முறையாக அவருடன் ஜோடியாக நடித்தார். அண்ணாத்த படத்தில் குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சூரி மற்றும் சதீஷ் ஆகியோரும் நடிக்கின்றனர், மேலும் டி இமானின் இசையும், வெற்றியின் ஒளிப்பதிவோடு படம் தயாராகிறது.

பல பேட்டிகளில் பல நடிகர்கள் பற்றி பேசியுள்ள மீனா, ஒரு பேட்டியில் நடிகர் ஹிர்திக் ரோஷனை பற்றி பேசுகையில், அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்..ஐ லவ் ஹிம்.. அவருடைய திருமணத்தின் போது என் இதயமே நின்று விட்டது.. என்று கூறியிருந்தார். அதன் படி,ஹிரித்திக் ரோஷனை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார்.

மேலும், எனது இதயமே நின்று போன ஒரு நாள் இது. என் ஆல் டைம் ஃபேவரைட்டான ஹிரித்திக் ரோஷனை, அவரது திருமணத்துக்கு பிறகு நடந்த கெட் டுகெதர் நிகழ்ச்சியில் சந்தித்தேன். எனவும் அவர் கூறியுள்ளார்.