ராமர் கோயில் திறப்பை ஆன்மிக நிகழ்வாக மட்டுமே பார்க்கிறேன் : ரஜினி | I see Ram temple opening only as a spiritual event: Rajinikanth
[ad_1]
ராமர் கோவில் திறப்பை ஆன்மீக நிகழ்வாக மட்டுமே பார்க்கிறேன்: ரஜினிகாந்த்
24 ஜனவரி, 2024 – 10:54 IST

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த ஜனவரி 22ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். விழா முடிந்து திரும்பிய ரஜினி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
“ராமர் கோயில் திறக்கப்பட்ட பிறகு முதலில் பார்த்த 150 பேரில் நானும் ஒருவன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.என்னைப் பொறுத்த வரை இது ஒரு ஆன்மீக நிகழ்வு.
ராமர் கோவில் கும்பாபிஷேகம் என்பது மத மற்றும் அரசியல் நிகழ்ச்சியா என்ற கேள்விக்கு… ‛‛ஒவ்வொருவரின் பார்வையும் வித்தியாசமாக உள்ளது. எல்லோருடைய பார்வையும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொருவரின் கருத்தும் அவரவர் கருத்து. இதை ஒரு ஆன்மீக நிகழ்வாக மட்டுமே பார்க்கிறேன்,” என்றார்.
[ad_2]