தொடர்ந்து 7வது ஆண்டாக தமிழக அளவிலான செஸ் போட்டிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தகுதி! – Newstamila.com
[ad_1]
மதுரை: தொடர்ந்து 7வது ஆண்டாக மாநில அளவிலான செஸ் போட்டியில் ஏ.செட்டியார்பட்டி அரசு பள்ளி மாணவர்கள் தகுதி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பள்ளிக் கல்வித்துறை சார்பில், வருவாய் மாவட்ட அளவிலான செஸ் போட்டி தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. 11 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஏ.செட்டியார்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 5ம் வகுப்பு மாணவி கே.வேதாஸ்ரீ முதலிடம் பெற்றார். இதன் மூலம் மாநில அளவிலான செஸ் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இப்பள்ளி மாணவர்கள் தொடர்ந்து 7வது ஆண்டாக செஸ் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
அதேபோல், இப்பள்ளி வளாகத்தில் உள்ள ஏ.வல்லப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர் மோ.சந்தோஷ், 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் முதலிடம் பெற்றார். 14 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் 9ம் வகுப்பு மாணவி ஏ.சோலையம்மாள் 2ம் இடம் பெற்றார்.
பள்ளிக் கல்வித் துறையின் 7-ஆம் ஆண்டு மாநில அளவிலான செஸ் போட்டியில் பங்கேற்ற மாணவர்களை ஏ.வல்லப்பட்டி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜி.வினோத், ஏ.செட்டியார்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியை எம்.மணிமேகலை, நடுநிலைப் பள்ளி ஆசிரியை செஸ் பயிற்சியாளர் என்.செந்தில்குமார் ஆகியோர் வழங்கினர். , ஏ.வல்லப்பட்டி. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கண்ணன், உடற்கல்வி ஆசிரியர்கள் சேதுபதிராஜா, விக்ரராசன் பாராட்டினர்.
[ad_2]