மாடர்ன் உடைகள் தேவையில்லை… 45 வயதுக்கு குறையாத அழகு… சேலையில் அப்படி போஸ் கொடுப்பார்.. விஜய் பட நடிகை.. – NewsTamila.com
[ad_1]

நடிகர் விஜய் நடித்த ‘பத்ரி’ படத்தில் கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை பூமிகா. இவர் புது தில்லியைச் சேர்ந்தவர். 2000 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘யுவகுடு’ படத்தின் மூலம் அறிமுகமானார்.
இப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்றார். ஸ்ரீகாந்த் இயக்கத்தில் வெளிவந்த ‘ரோஜா கூட்டம்’ படத்தில் நடித்தார். இந்த படத்தின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார்.
பிரபல முன்னணி நடிகர் சூர்யாவுடன் இணைந்து ‘ஜில்லுனு ஒரு காதல்’ படத்தில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.
நடிகை பூமிகா 2007 இல் பரத் தாகூரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
நடிகை பூமிகா மீண்டும் தமிழ் சினிமாவில் நுழைந்துள்ளார். ஜெயம் ரவி 30வது படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். இவர் 2018ஆம் ஆண்டு சமந்தா நடித்த ‘யூ டர்ன்’ மற்றும் ‘கண்ணை நம்பாதே’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். தற்போது பிங்க் கலர் புடவையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார், தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
[ad_2]