Rajinikanth: வெடித்த புது சர்ச்சை.. ரம்பாவிடம் குறும்புத்தனம் செய்த ரஜினி-rambha shares experience acting with rajinikanth
[ad_1]
அருணாச்சலம் படப்பிடிப்பில் இருந்தபோது, சல்மான் கானுடன் ‘பந்தன்’ என்ற இந்திப் படத்தையும் செய்து கொண்டிருந்தேன். நான் ஹைதராபாத்தில் ரஜினிகாந்துடன் படப்பிடிப்பில் இருந்ததால், ‘பந்தன்’ படக்குழுவும் இங்கே படப்பிடிப்பை நடத்தியது. ஒரு நாள் சல்மான் கான், ஜாக்கி ஷெராப்.. அருணாச்சலம் செட்டுக்கு வந்தனர். அவர்களைப் பார்த்ததும் நான் சென்று கட்டிப்பிடித்தேன். ஏனென்றால் அவர்களுடையது பம்பாய் கலாச்சாரம். இதை ரஜினிகாந்த் கவனித்தார். அவர்கள் சென்ற பிறகு ரஜினிகாந்த் மிகவும் கோபமாக இருப்பதை கவனித்தேன். அப்போது ஒளிப்பதிவாளர் யுகே செந்தில் குமார் என்னிடம் வந்து நான் என்ன செய்தேன் என்று கேட்டார்.
[ad_2]
Source link