cinema

ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறிய நடிகர் ரஜினிகாந்த்

[ad_1]

சென்னை: சென்னை பாய்ஸ் கார்டன் இல்லம் முன்பு திரண்டிருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் கை அசைத்து புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.

‘ஜெயிலர்’ வெற்றிக்குப் பிறகு, ஞானவேல் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். அவரது 170வது படமான இதில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கவுள்ளார் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது தயாராகிறது முதல்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரம் மற்றும் திருநெல்வேலியில் நடந்த நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து வந்தது. இதற்காக ரஜினி மற்றும் படக்குழுவினர் மும்பை சென்றனர். அங்கு ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன.

இந்நிலையில் இப்படத்திற்கு ‘வேட்டைக்காரன்’ என்று பெயர் வைத்துள்ளனர். ரஜினி பிறந்தநாளில் படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டது. இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் கன்னியாகுமரியில் படப்பிடிப்பில் இருந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் காலமானதால் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சென்னை பாய்ஸ் கார்டன் வீட்டின் முன்பு திரண்டிருந்த தனது ரசிகர்களை கை அசைத்து புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.

முன்னதாக நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் இல்லம் முன்பு நேற்று இரவு முதல் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அவரது ரசிகர்கள் குவிந்தனர். புத்தாண்டை அவரது வீட்டின் முன்பு கேக் வெட்டி கொண்டாடினர்.

இதையடுத்து இன்று (ஜன.1) காலை தனது வீட்டில் இருந்து வெளியே வந்த ரஜினிகாந்த், ரசிகர்களை கையசைத்து வாழ்த்து தெரிவித்தார். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் என்று ரசிகர்களை நோக்கி கை அசைத்ததால் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். பின்னர் மகிழ்ச்சியுடன் கலைந்து சென்றனர். ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *