cinema

பான் இந்தியா படத்தில் ஹீரோவானார் பீட்டர் ஹெய்ன்

[ad_1]

சென்னை: பீட்டர் ஹெய்ன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் ஸ்டண்ட் இயக்குநராக பணியாற்றியவர். தமிழில் லெர்பனன், எந்திரன், கஜினி, பாகுபலி உள்ளிட்ட பல பெரிய படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் தற்போது பான் இந்தியா படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ட்ரெண்ட்ஸ் சினிமாஸ் ஜேஎம் பஷீர், எம்டி சினிமாஸ் ஏஎம் சௌத்ரி தயாரித்துள்ள இந்தப் படத்தை எம்ஏ வெவாரி இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மானை அணுகியுள்ளனர்.

இதில் நடிப்பது குறித்து பீட்டர் ஹெய்ன் கூறும்போது, ​​“முதலில் என்னால் நடிக்க முடியாது என்று கூறி அதை தவிர்த்துவிட்டேன். இந்தக் கதைக்கு நீங்கள் பொருத்தமாக இருப்பீர்கள் என்பதில் இயக்குநர் உறுதியாக இருந்தார். பிறகு கதையில் சில மாற்றங்கள் செய்து இப்போது நடிக்கிறேன். இதில் நான் காட்டுவாசியாக நடிக்கிறேன். இது ஒரு புதுமையான ஆக்‌ஷன் படமாக இருக்கும். இதற்காக தனியாக பயிற்சி எடுத்து வருகிறேன்.



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *