நடிகர் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்த் பெயர்: விஷால் தகவல்
[ad_1]
சென்னை: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவால் டிசம்பர் 28ஆம் தேதி காலமானார். அவரது மறைவுக்கு ஏராளமான பிரபலங்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். அப்போது சில திரைப் பிரபலங்கள் வெளிநாட்டில் இருந்ததால் கலந்து கொள்ள முடியவில்லை. இப்போது விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பினார் விஷால், நடிகர் ஆர்யாவுடன் நேற்று விஜயகாந்தின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அங்கு வந்த மக்களுக்கு உணவு பரிமாறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால்,விஜயகாந்த் நல்ல மனிதர் தைரியமான அரசியல்வாதி. பொதுவாக நல்ல மனிதனை அவன் இறந்த பிறகுதான் சாமி என்று அழைப்போம். ஆனால் விஜயகாந்த் உயிருடன் இருந்தபோது சாமி என்றே அழைக்கப்பட்டார். அவரது இறுதி ஊர்வலம்
என்னால் கலந்து கொள்ள முடியாமல் போனது மிகவும் வருத்தமாக இருந்தது. நடிகர் சங்க கட்டிடத்துக்கு கண்டிப்பாக விஜயகாந்த் பெயர் சூட்டப்படும். அதில் யாரும் உடன்பட மாட்டார்கள்.
அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், வரும் 19ம் தேதி இரங்கல் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,” என்றார்.இதையடுத்து, விஜயகாந்த் வீட்டிற்கு சென்ற விஷால், பிரேமலதாவை சந்தித்து ஆறுதல் கூறினார்.
[ad_2]