ஷெரின் காஞ்ச்வாலாவிற்கு டும் டும் | shirin kanchwala got engaged
[ad_1]
ஷெரின் காஞ்சவாலாவுக்கு டும் டும்
10 ஜனவரி, 2024 – 14:25 IST
ஷெரின் காஞ்சவாலா மும்பையில் பிறந்து வளர்ந்தவர். மாடலிங் துறையில் நுழைந்து விளம்பரங்களில் நடித்து பின்னர் திரைப்பட நடிகையானார். சிவகார்த்திகேயனின் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், பின்னர் சிபிராஜுடன் வால்டர், சந்தானத்துடன் டிகிலோனா உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது மிஸ்டர் ஜூ கீப்பர் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஷெரின் காஞ்ச்வாலாவுக்கும் அசார்முன் என்ற தொழிலதிபருக்கும் கடந்த 5ம் தேதி சத்தமில்லாமல் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதை அவர் இப்போதுதான் வெளிப்படுத்தியுள்ளார். நிச்சயதார்த்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள அவர், “நான் என்றென்றும் இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
திருமண தேதி இன்னும் முடிவாகவில்லை என்றும் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ஷெரின் காஞ்ச்வாலா தெரிவித்துள்ளார்.
[ad_2]