cinema

குழந்தை நட்சத்திரமாகும் மோகன் பாபுவின் பேரன் | Mohan Babu grandson debut in hero

[ad_1]

குழந்தை நட்சத்திரம் மோகன் பாபுவின் பேரன்

13 ஜனவரி, 2024 – 12:48 IST

எழுத்துரு அளவு:


மோகன்-பாபு--பேரன்-அறிமுக-நாயகன்

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் மோகன் பாபு. ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர். இவரது மகன்கள் மனோஜ் மஞ்சு, விஷ்ணு மஞ்சு, மகள் லட்சுமி மஞ்சு ஆகியோர் சினிமாவில் நடித்து வருகின்றனர். படமும் தயாரிக்கிறார்கள். விஷ்ணு மஞ்சுவின் மகனும் மோகன் பாபுவின் பேரனுமான அவ்ராம் மஞ்சு, கண்ணப்பா படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார்.

63 நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனாரின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகி வருகிறது. சுமார் 100 கோடி செலவில் பான் இந்தியா படமாக தயாரிக்கிறார் மோகன் பாபு. இப்படத்தின் முதல் கட்ட பணிகள் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் நியூசிலாந்தில் 90 நாட்கள் நடந்தன. இதில் கண்ணப்ப நாயனாராக விஷ்ணு மஞ்சுவும், அவரது மனைவியாக ப்ரீத்தி முகுந்தனும் நடித்துள்ளனர். மோகன்லால், பிரபாஸ், சரத்குமார் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தில் தனது மகன் நடிப்பது குறித்து விஷ்ணு மஞ்சு கூறுகையில், ‘கண்ணப்பா’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனதை எனது மகன் பெருமையாக கருதுகிறேன்.என்னை பொறுத்த வரையில் ‘கண்ணப்பா’ வெறும் படமல்ல. என் கனவு, லட்சியம் மற்றும் என் மனதில் ஆழமான உணர்வுப்பூர்வமான படைப்பு.எங்கள் குடும்பத்தின் மூன்று தலைமுறை சினிமா பயணத்தின் சங்கமம் என் மகனின் அறிமுகம்.அவ்ராமுடன் இந்த சினிமா பயணத்தை துவங்கி அனைத்து திரையுலக அன்பர்களின் ஆசிகளை பணிவுடன் வேண்டுகிறேன் ‘கண்ணப்பா’ படம் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மறக்க முடியாத அனுபவமாகவும், எங்கள் குடும்பத்தின் சினிமா வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகவும் இருக்கும். கூறினார்.



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *