cinema

வருண் தவணுடன் கீர்த்தி சுரேஷ் – அட்லீ தயாரிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வீடியோ!

[ad_1]

மும்பை: பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தை அட்லீ தயாரிக்கிறார். இப்படத்திற்கான அறிவிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘ஜவான்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான அட்லீ, தனது மனைவி பிரியாவுடன் இணைந்து பாலிவுட்டில் புதிய படம் ஒன்றைத் தயாரிக்கிறார். இந்தப் படம் அவர் நடித்த ‘தெறி’ படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது. ஆனால் படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. ரீமேக் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில் இப்படத்தின் பூஜை மும்பையில் நடைபெற்றது. இந்த வீடியோவை அட்லீ தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

கலீஸ் இயக்கும் இப்படத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படம் குறித்த வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. விரைவில் தலைப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *