ஜீ தமிழில் நினைத்தேன் வந்தாய்
[ad_1]
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வரும் 22ம் தேதி முதல் ‘நினைத்தேன் வந்தாய்’ என்ற புதிய மெகா சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இதில் ஹீரோவாக கணேஷ் வெங்கட்ராம் நடிக்கிறார். கீர்த்தனாபோத்வால் அவரது மனைவியாகவும், ஜாஸ்மின் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். கணேஷ் வெங்கட்ராமின் குழந்தைகளாக கனிஷ்கா, கௌசிக், யுக்தா, ஷபா ஆகியோர் நடிக்கின்றனர். இந்தத் தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
இந்த புதிய தொடரின் காரணமாக சில சீரியல்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது. திங்கள்கிழமை முதல் மாலை 6 மற்றும் 7 மணிக்கு ‘சீதா ராமன்’ சீரியலும், இரவு 9.30 மணிக்கு ‘சந்தியா ராகம்’, இரவு 7 மணிக்கு ‘மீனாட்சி பொண்ணுங்க’ சீரியலும் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
[ad_2]