ஃபஹத் பாசில் – வடிவேலு இணையும் படத்துக்கு ‘மாரீசன்’ என தலைப்பு
[ad_1]
சென்னை: ‘மாமன்னன்’ படத்துக்குப் பிறகு ஃபகத் பாசில், வடிவேலு இணையும் புதிய படத்துக்கு ‘மாரீசன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
சுதிஷ் ஷங்கர் இயக்கும் இப்படம் ஆர்பி சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸின் 98வது படமாகும். கடந்த 2009ம் ஆண்டு வெளியான ‘ஆறு மனமே’ படத்தை இயக்கிய இவர், 2014ல் மலையாளத்தில் திலீப் நடித்த ‘வில்லி வீரன்’ படத்தை இயக்கினார். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
‘மாமன்னன்’ படத்திற்கு பிறகு வடிவேலு மற்றும் ஃபஹத் பாசில் இருவரும் இணைந்து நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்திற்கு ‘மாரீசன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இன்று பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்குகிறது. கலைசெல்வன் சிவாஜி கையாளும் இப்படத்திற்கு ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.
[ad_2]