இந்த வாரம் 7 படங்கள் ரிலீஸ் | 7 films release this week
[ad_1]
இந்த வாரம் 7 படங்கள் ரிலீஸ்
22 ஜன, 2024 – 11:48 IST
2024ஆம் ஆண்டிலும் 200க்கும் அதிகமான படங்கள் வெளியாக வாய்ப்புள்ளது என்பது வருடத்தின் ஆரம்பமே நிரூபித்துவிட்டது. ஜனவரி முதல் வாரத்தில் நான்கு படங்களும், இரண்டாவது வாரத்தில் நான்கு படங்களும் வெளியாகின. கடந்த வாரம் ஒரு படம் கூட வெளியாகவில்லை. இருந்தாலும் அந்த வாரத்திற்கும் சேர்த்து இந்த வாரம் 7 படங்கள் வரை வெளியாக உள்ளன.
இந்த வாரம் ஜனவரி 25ஆம் தேதி தைப்பூசம், 26ஆம் தேதி குடியரசு தினம் ஆகிய இரண்டு நாட்களும் விடுமுறை நாட்கள். அடுத்து சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்கள் என தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் இத்தனை படங்கள் வெளியாகின்றன. எப்படியாவது குறைந்தபட்ச வசூலையாவது அள்ளிவிடலாம் என்பதுதான் திட்டம்.
ஜனவரி 25ஆம் தேதி, “ப்ளூ ஸ்டார், சிங்கப்பூர் சலூன், முடக்கறுத்தான், தூக்குதுரை’’, ஜனவரி 26ஆம் தேதி “லோக்கல் சரக்கு, த.நா, நியதி,” ஆகிய படங்கள் வெளியாகின்றன. எல்லாமே சிறிய பட்ஜெட் படங்கள்தான். இருந்தாலும் விடுமுறை நாட்களைப் பயன்படுத்திக் கொண்டு எந்தப் படம் வசூலை அள்ளப் போகிறது என்பதைத் தெரிந்துகொள்ள சில நாட்கள் காத்திருக்க வேண்டும்.
[ad_2]