cinema

சந்தானத்தின் முதல் பெரிய பட்ஜெட் படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’

[ad_1]

சென்னை: சந்தானம், மேகா ஆகாஷ் நடித்துள்ள படம் ‘வடக்குபட்டி ராமசாமி’. பீப்பிள் மீடியா பேக்டரி சார்பில் விஸ்வ பிரசாத் தயாரித்துள்ள இந்த படத்தை கார்த்திக் யோகி இயக்கியுள்ளார். பிப்.2ஆம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

விழாவில் சந்தானம் பேசுகையில், “இது என்னுடைய முதல் பெரிய பட்ஜெட் படம். ‘டெட்ரிடர்ன்ஸ்’ பாணியில் நகைச்சுவைப் படம் எடுத்து ஹிட் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். வந்த கதை இது. இந்தப் படத்தில் யாருடைய மனதையும் புண்படுத்தும் காட்சிகள் இருக்காது. எல்லோரும் சிரித்து மகிழ்வார்கள். நானும் ஆர்யாவும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளோம். இடையில் சேர்ந்து நடிக்கவில்லை. விரைவில் நாங்கள் இணைந்து ஒரு அட்வென்ச்சர் ஃபேண்டஸி படம் பண்ணப் போகிறோம். ஆர்யா தயாரிப்பிலும் நடிப்பேன்,” என்றார்.

இந்த விழாவில் நடிகர்கள் ஆர்யா, அல்லு சிரிஷ், இயக்குனர் மடோன் அஷ்வின் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *