கர்ப்ப காலத்திற்கு ஏற்ற யோகாசனத்தை கடைபிடிக்கும் அமலாபால் | Amalapal practices yoga asanas suitable for pregnancy
[ad_1]
கர்ப்பத்திற்கு ஏற்ற யோகாசனங்களை அமலாபால் பயிற்சி செய்கிறார்
29 ஜனவரி, 2024 – 11:55 IST

தமிழ், தெலுங்கு, மலையாளம் என சில வருடங்களுக்கு முன்பு வரை பிஸியான நடிகையாக இருந்தவர் அமலாபால். இயக்குனர் விஜய்யுடனான திருமணம், கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து என பரபரப்பான சம்பவங்களுக்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார் அமலாபால். இவர் தனது காதலர் ஜெகத் தேசாய் என்பவரை கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.
சமீபத்தில் தான் கர்ப்பம் தரித்ததாக அறிவித்த அமலா பால், கர்ப்பகால புகைப்படங்களை சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்து வருகிறார். தற்போது அமலாபால் கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமான யோகாசனமான மலாசனாவை தொடர்ந்து பயிற்சி செய்து வருகிறார்.
இது குறித்த வீடியோவையும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள அமலாபால், “ இந்த ஆசனம் இடுப்புப் பகுதியை வலுவாக வைத்திருக்க உதவுகிறது, அதே சமயம் இந்த ஆசனத்தை செய்ய விரும்புபவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும். .”
[ad_2]