இந்தி நடிகரை மணக்கிறார் கீர்த்தி கர்பந்தா
[ad_1]
மும்பை: பிரபல இந்தி நடிகை கீர்த்தி கர்பந்தா. தெலுங்கிலும் நடித்துள்ள இவர் தமிழில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ‘புரூஸ்லீ’ படத்தில் நடித்துள்ளார். இவர் இந்தி நடிகர் புல்கித் சாம்ராட்டை கடந்த நான்கு வருடங்களாக காதலித்து வந்தார். இந்நிலையில் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் இவர்களது நண்பரின் பங்களாவில் நடந்து முடிந்துள்ளது.
இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். இந்த நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இருவரும் நிச்சயதார்த்த மோதிரங்களுடன் காணப்படுகின்றனர். விரைவில் இவர்களது திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது
[ad_2]