cinema

புற்றுநோய் பாதிப்பு, அனுபவித்த கஷ்டம்- சீரியல் நடிகர் சாய்ராம் எமோஷ்னல் பேட்டி

[ad_1]

நடிகர் சாய்ராம்

சீரியல்கள் மூலம் பிரபலமானவர்கள் பலர் இருக்கிறார்கள் அவர்களில் ஒருவர் சாய்ராம்.

பாடகராக தனது பயணத்தை தொடங்கிய இவர் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என பல சேனல்களில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடித்துள்ளார்.

ஜீ தமிழில் ஒளிபரப்பான நீதானே என் பொன்வசந்தம் என்ற சீரியல் தான் கடைசியாக அவர் நடித்தது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அனுபவித்த கஷ்டம் - சீரியல் நடிகர் சாய்ராம் உணர்ச்சிப்பூர்வமான பேட்டி |  சீரியல் நடிகர் சாய்ராம் கடந்த கால வாழ்க்கை

நடிகருடன் நேர்காணல்

இந்நிலையில் நடிகர் சாய்ராம் தனது வாழ்க்கையில் நடந்த ஒரு மோசமான விஷயம் குறித்து பேட்டியளித்துள்ளார். இதில் அவர் கூறியதாவது, நான் பாடகராக எனது கேரியரை ஆரம்பித்து ஒரு காலத்தில் மிகவும் பிஸியாக இருந்தேன்.

பிறகு சீரியல் வாய்ப்பு கிடைக்க இரண்டும் செய்தேன். தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து பல சீரியல்கள் என்னை பிரபலமாக்கியது. 2012 என் வாழ்வில் மிக மோசமான காலகட்டம்.

எனக்கு கணைய புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது, எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் மருத்துவர்களின் ஊக்கத்தால் இன்று நான் நலமாக இருக்கிறேன்.

அப்போது நான் தொடர்ந்து கிரியா யோகா செய்து வந்தேன். அதுவும் எனக்கு சற்று ஆறுதல் அளித்தது. நான் இப்போது புற்றுநோயிலிருந்து தப்பியுள்ளேன் என்று கூறினார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அனுபவித்த கஷ்டம் - சீரியல் நடிகர் சாய்ராம் உணர்ச்சிப்பூர்வமான பேட்டி |  சீரியல் நடிகர் சாய்ராம் கடந்த கால வாழ்க்கை

[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *