Beauty Tips

முடி வறட்சிக்கு என்னதான் தீர்வு?

[ad_1]

ஆண், பெண் இருபாலருக்கும் இன்றைய காலகட்டத்தில் தலைமுடி பராமரிப்பு என்பது மிகவும் அவசியமானது. 

முடி வறட்சி, முடி வேர்களில் அழுக்கு, முடிக்குத் தேவையான ஊட்டச்சத்து இல்லாமை, அடிக்கடி தலைக்கு குளித்தல், ஷாம்பூ, கண்டிஷனர் பயன்பாடுகளில் மாற்றம், மரபியல் என முடி உதிர்வுக்கு பல காரணங்கள் இருக்கின்றன. 

இதில் பலரும் முடி வறட்சியினால் பாதிக்கப்படுவதுண்டு. தலைக்கு குளித்தாலும் இல்லையானாலும் முடி வறட்சியாக காணப்படும். அவ்வாறு இருப்பவர்கள் பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள் மற்றும் தீர்வுகள் இதோ..

பின்பற்ற வேண்டியவை 

♦தலைக்கு குளிப்பதற்கு முன்பு கண்டிப்பாக எண்ணெய் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும். முடி வறட்சியாக இருக்கும்போது மீண்டும் ஷாம்பூ பயன்படுத்தினால் முடி பாழாகிவிடும். 

♦அடுத்ததாக, ஷாம்பூ பயன்படுத்திய பிறகு கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும் அல்லது ஷாம்பூக்கு பதிலாக சிகைக்காய் பயன்படுத்தலாம். 

♦தலைமுடி சிக்காக இருக்கும்போது குளிக்கக்கூடாது. குளிப்பதற்கு முன் எண்ணெய் வைத்து மசாஜ் செய்து முடியை வாரிவிட்டு குளிக்கலாம். முந்தைய நாள் இரவே எண்ணெய் மசாஜ் செய்துவிட்டு காலையில் குளித்தாலும் நல்லது. 

♦ஷாம்பூ போட்டபின்பு தலையை நன்றாக அலச வேண்டும். 

♦குளிப்பதற்கு வெதுவெதுப்பான, குளிர்ந்த நீரையே பயன்படுத்த வேண்டும். மிகவும் சூடான நீர் வேண்டாம். 

♦குளித்தபின் முடியை டவல் கொண்டு அழுத்தமாக துடைக்கக் கூடாது. அதுபோன்று நன்கு உலர வைக்க வேண்டும். 

♦தலைக்கு குளித்த அன்று இரவோ அல்லது அடுத்த நாள் காலையிலோ தலைக்கு எண்ணெய் வைத்துவிட வேண்டும். 

♦ வாரத்திற்கு 2-3 முறை மட்டும் தலைமுடியை அலசுங்கள். 

இதையும் படிக்க | சிவப்பு அரிசி சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

தீர்வுகள்

♦மேற்குறிப்பிட்டவற்றை பின்பற்றியதுடன் தலைமுடி வறட்சியைப் போக்க வீட்டில் உள்ள பொருள்களை பயன்படுத்தலாம். 

♦கற்றாழை முடி வறட்சிக்கு ஒரு சிறந்த தீர்வு. கற்றாழை ஜெல்லை தலைமுடியில் தடவி ஊறவைத்து குளிக்கலாம். 

♦தயிரில் ஏராளமான ஊட்டச்சத்துகள் இருப்பதால் இதையும் தலைமுடியில் அப்ளை செய்து பின்னர் குளிக்கலாம். 

♦ முட்டையின் வெள்ளைக்கரு பேக்கையும் தலைக்கு போடலாம். 

♦மருதாணி, செம்பருத்தி இலைகளும் தலைமுடிக்குத் தேவையான ஊட்டச்சத்தை வழங்குகின்றன. 

♦கண்டிப்பாக ஏதேனும் ஒரு பேக் போட்டு தலைக்கு குளிப்பது நல்லது. எதுவுமே செய்ய முடியாதவர்கள் ஏதேனும் ஒரு எண்ணெய்யை லேசாக சூடு செய்து முடியின் வேர்க்கால்களில் படும்படி மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து குளிக்கவும்.

இதையும் படிக்க | இரவு உணவை சீக்கிரம் சாப்பிட வேண்டும், ஏன்?



[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *