லால் சலாம் படத்தின் 2 நிமிட காட்சி, மத வசனங்கள் நீக்கம் | What removed in Lal salaam movie during censor
[ad_1]
‘லால் சலாம்’ படத்தின் 2 நிமிட மத வசனங்கள் நீக்கப்பட்டன
07 பிப்ரவரி, 2024 – 14:00 IST
‘லால் சலாம்’ படத்தை ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் ‘மொய்தீன் பாய்’ வேடத்தில் நடித்திருந்தார். விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் இப்படத்தை தயாரித்துள்ளார். ரெட் ஜெயண்ட் இப்படத்தை தமிழகத்தில் வெளியிடுகிறது. இப்படம் வரும் 9ம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில் படத்தை பார்த்த சென்சார் போர்டு படத்திற்கு ‘யுஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும், படத்தில் இடம்பெற்ற 2 நிமிடம் 6 வினாடி காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. மேலும், ஒரு நிமிடம் 49 வினாடிகள் கொண்ட காட்சிகளை மாற்றுமாறு கோரப்பட்டுள்ளது. இது தவிர இந்தப் படத்தில் பல இடங்களில் சில மோசமான வார்த்தைகள் இடம் பெற்றிருந்ததால் அது நீக்கப்பட்டுள்ளது. மத வசனங்களும் நீக்கப்பட்டுள்ளன. படத்தின் மொத்த நீளம் 152 நிமிடங்கள், 38 வினாடிகள் என சான்றிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[ad_2]