சர்வைவல் த்ரில்லர் படத்தில் மாஸ்டர் மகேந்திரன்
[ad_1]
சென்னை: ‘எதிரொலி’ படத்தை இயக்கிய நவீன் கணேஷ் அடுத்ததாக சர்வைவல் த்ரில்லர் படத்தை இயக்குகிறார். சனா ஸ்டுடியோஸ் வழங்கும் இந்தப் படத்தை முத்து, சந்தோஷ் சிவன், ரவி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். மாஸ்டர் மகேந்திரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஜீவிதா கதாநாயகியாக அறிமுகமாகிறார். சார்லி, கும்கி அஷ்வின், சரத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அபிஷேக் ஏஆர் இசையமைத்துள்ளார். ரவிவர்மா ஒளிப்பதிவு செய்கிறார். சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. சனா ஸ்டுடியோவின் முதல் தயாரிப்பை இயக்குநர்கள் சீமான், சரண், அருண்ராஜா காமராஜ், கல்யாண் ஆகியோர் தொடங்கினர்.
[ad_2]