வாரிசு நடிகருடன் புதிய காதல்.. சமந்தாவின் இரண்டாம் திருமணத்திற்கு மாப்பிளை ரெடி
[ad_1]
சமந்தாவின் முதல் திருமணம்
நடிகை சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் சில வருடங்களில் விவாகரத்தில் முடிந்தது.
இரண்டாவது திருமணம் என தகவல்
கடந்த சில நாட்களாக நடிகை சமந்தா அவர் இரண்டாவது திருமணம் செய்யப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவர் தனது வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பதாக கூறப்படுகிறது.
இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும்படி சமந்தாவை அவரது வீட்டில் இருந்து வற்புறுத்துவதாகவும் செய்திகள் வெளியாகின. எனினும் இது குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
வாரிசு நடிகருடன் காதல்?
இந்நிலையில் சமந்தா பிரபல வாரிசு நடிகரை காதலிப்பதாகவும், அவரை இரண்டாவது திருமணம் செய்ய இருப்பதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
வீட்டில் மாப்பிள்ளை பார்த்தாரா? அல்லது தற்போது வைரலாகி வரும் காதலருடன் சமந்தா இரண்டாவது திருமணமா என்பது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.
இதற்கு சமந்தா பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சமந்தா தரப்பில் இருந்து என்ன தகவல் வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
[ad_2]