காதலர் தினம் ஸ்பெஷல்: விஜய் சேதுபதி, த்ரிஷாவின் ‘96’ ரீ-ரிலீஸ்!
[ad_1]
சென்னை: விஜய் சேதுபதி – த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ’96’ திரைப்படம் காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதி மீண்டும் வெளியாகவுள்ளது. இதற்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
பிரேம்குமார் இயக்கத்தில், அக்டோபர் 2018 இல் வெளியான படம் ’96’. பள்ளிக் காதல் கதையை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் படத்தை தயாரித்தது. இப்படம் ரூ.15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது காரணம் ரசிகர்களின் வரவேற்பு பட்ஜெட்டை தாண்டி ரூ.50 கோடி வசூல் செய்தது.
பரஸ்பர அன்பைப் பற்றி பேசும் இந்த திரைப்படம் அவர்களின் பள்ளி காதல் மற்றும் கல்லூரி நினைவுகளை பலருக்கு மீட்டெடுத்தது. இந்நிலையில் இப்படம் காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதி திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது. டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், சென்னை சிட்டி சென்டர் ஐநாக்ஸில் பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன.
ராம் & ஜானு ஞாபகம் இருக்கிறதா? பேரன்பே காதல் நினைவிருக்கிறதா?
[ad_2]